நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் இயேசையா
1.
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை – நீரே
2.
நாம் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர் – நீரே
3.
எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர் – நீரே
4.
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
எனக்காக திரு இரத்தம் நீர் சிந்தினீர் – நீரே